சாத்தான்குளம்; காவலர் முருகன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

Published:

madurai district court
madurai district court

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரனையை செப் 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு – மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு.!!

சாத்தான்குளம் தந்தை மகன் சித்தரவை கொலை விவகாரத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  வழக்கின் விசாரணையை சிபிஐ  நடத்தி வருகிறது,

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  காவலர் முருகன் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்,முன்னதாக கடந்த ம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் மனு மீதான விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மனு மீதான விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது

விசாரணையின் பொழுது காவலர் முருகன் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொளி காட்சி வாயிலாக வாதம் நடத்தினர்

இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு உத்தரவிட்டார்,மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முருகனின் ஜாமீன் மனு இதுவரை 4வது முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img