பாகிஸ்தானில் இந்தாண்டு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளனர். இதில் இரண்டு பேர் தேசிய சட்டமன்றத்திற்கு மற்றவர்கள் மாகாண ச்ட்டம்ன்றதிற்கும் போட்டியிட உள்ளனர்.
பாகிஸ்தான் பொது தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளதை பாகிஸ்தான் திருநங்கைகள் தேர்தல் நெட்வொர்க் உறுதி செய்துள்ளது.
பர்சனா ரையாஸ், அர்சு கான், லூப்னா, கோவால்,மேடம் பூட்டோ, ஆஷே மற்றும் பலர் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.



