தென்மேற்கு பருவமழை கேரளாவில் 29 ஆம் தேதி தொடங்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published:

10 May24 southwest mansoon - 2026தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 29 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் கடல் பகுதியில், அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுதாகவும் கூறியுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் இருக்கும் என்றும், இந்த மழைப்பொழிவானது வழக்கமான காலகட்டமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலேயே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் அரபிக் கடற்பகுதியில் உருவாக உள்ள புயல், தெற்கு ஓமனை நோக்கி நகர இருப்பதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இதனால் இந்திய பகுதிகளில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img