நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனது தந்தையார் காலமான விவரத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ‘அம்மணி’, ‘நெருங்கி வா’, ‘முத்த மிடாதே’, ‘ஆராஹேனம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ‘யுத்தம் செய்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஜீ தமிழ் டிவி.,யில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பழக்கமான முகம். இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைகள் பல சந்தித்ததோடு, கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார்.
இரு தினங்களுக்கு முன் லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை காலமானார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 97 வயதை எட்டியுள்ள தனது தந்தையின் மறைவால் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்திருப்பதாகவும், சோகத்தை அனுசரிக்கவில்லை. அதற்கு மாறாக அவரின் வாழ்க்கையை கொண்டாடுவதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
My father left for the heavenly abode?to reunite with Amma, Akka & Anna ?He was 97 young, strong gentleman? He lived an eventful life, a roller coaster ride of a life, but absolutely fruitful & purposeful! What a Man????We are not mourning, we are celebrating his life??
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 9, 2018