கேரளாவில் 3 பெண்கள் ஒன்று சேர்ந்து உபர் டாக்ஸி ஓட்டுநரின் வேட்டியை உருவி,
அவரை உடல் ரீதியாக தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சியை சேர்ந்த ஏஞ்சல் மேரி, கிளாரா, ஷீஜா ஆகிய 3 பெண்கள் உபேர் டாக்ஸியை
ஆன்லைன் மூலம் புக் செய்துள்ளனர்.
டாக்ஸியில் இரண்டு பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதியுள்ளது என்று கூறியதால்,
நாங்கள் 3 பேரும் பகிர்ந்துகொள்கிறோம் என அந்த பெண்கள் கூறியுள்ளனர்.
டாக்ஸியில் ஏறி அமர்ந்துகொண்ட பெண்கள், அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி
டாக்ஸி ஓட்டுநரை கிண்டல் செய்துள்ளனர்.
இதுகுறித்து டாக்ஸி ஓட்டுநர் கூறியதாவது, டாக்ஸியில் ஏறி அமர்ந்துகொண்ட
பின்னர் அப்பெண்கள் என்னை கீழே இறங்குமாறு கூறினர், நான் மறுத்தபோது என்னை
டாக்ஸியில் இருந்து கீழே தள்ளினர்.
கீழே விழுந்த நான் எழுந்து சென்று, அப்பெண்களிடம் எதற்காக இப்படி
செய்கிறீர்கள், வாகனத்தை விட்டு கீழே இறங்குங்கள் என கூறியபோது, அதில் ஒரு
பெண் கற்களை எடுத்து எது முகத்தில் வீசினார்.
எனது காரில் அமர்ந்து கொண்டு கத்தி கூச்சலிட்டனர், எனது கையை உடைத்தார்கள்,
ஒரு கட்டத்தில் எனது வேட்டியை உருவ முயற்சித்தார்கள், இவை அனைத்தையும்
அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் மக்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள், எனக்கு
ஏற்பட்ட சிறு காயங்களுக்கு மருத்து போட்ட பின்னர் காவல் நிலையம் சென்று
போலீசில் புகார் அளித்தேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, அப்பெண்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் பெயிலில்
வெளிவந்துள்ளனர் என கூறியுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தினந்தோறும் நடப்பது வேதனை அளித்தாலும், அவைகளை
நம் சமூகம் தீவிரமாகவே எடுத்துக்கொள்கிறது.
அதுவே, ஆண்களுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற சம்பவங்களை நம் சமூகம்
நோக்கும் பார்வை வித்தியாசமாகவே இருக்கிறது.
செய்தி… கே.சி.சாமி



