சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலின் மேற்கூரையில் துளை போட்டு, 5
கோடியே 75 லட்சம் ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த,
சிபிசிஐடி காவல்துறையினர் பீகார் விரைந்துள்ளனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி, சென்னை எழும்பூர் வந்த ரயிலில் சுமார் 343
கோடி ரூபாய் வங்கிப் பணம் கொண்டுவரப்பட்டது.
அப்போது, பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மேற்கூரையில் துளை போட்டு, 5
கோடியே 75 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், ஜார்கண்ட் உள்ளிட்ட
வடமாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், ஓராண்டு முடிந்த பின்னரும்
இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை.
இந்நிலையில், தற்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சிபிசிஐடி தனிப்படையினர்,
பிகார் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




