ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி! 4 மணி நேரத்தில் ஒருவர் கைது!

Published:

atm-ilanji-theft
atm-ilanji-theft

ATM இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்த நபரை CCTV உதவியுடன் 4 மணி நேரத்தில் கைது செய்தனர் குற்றாலம் காவல் துறையினர்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சி-தென்காசி சாலையில் அமைந்துள்ள IOB ATM இயந்திரத்தில் இன்று(08.09.2020) அதிகாலை 01.00 மணி அளவில் மர்ம நபர் புகுந்து ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.. இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தினால் திரும்பி சென்றுள்ளார்.

atm-theft
atm-theft

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த குற்றாலம் காவல்துறையினர் ATM அறையிலிருந்த CCTV கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது திருட்டில் ஈடுபட்டது இலஞ்சி வேளாளர் தெருவைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து (19) என்பது தெரியவந்தது.

பின்னர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் முத்துவை கைது செய்தனர்.. திருடனை நான்கு மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img