அயோத்திக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அனுப்பி வைக்கப் பட்ட பெரிய மணி, விக்ரகங்கள்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
bell-ramnad
bell-ramnad

அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள கோவில் மணி மற்றும் ராமர், சீதை, லட்சுமணர் விக்ரகங்கள் அடங்கிய ராமரத யாத்திரை வாகனத்தை பாஜக.,வினர் வழியனுப்பி வைத்தனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் நாடு முழுதிலும் இருந்து அன்பர்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் தங்கம், வெள்ளி, கட்டுமானப் பொருட்களை நன்கொடைகளாக வழங்கி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாளை நேற்று பாரதிய ஜனதாக் கட்சியினர் பரவலாகக் கொண்டாடினர்.

rameswaram-ayodhya-bell-pooja
rameswaram-ayodhya-bell-pooja

இந்நிலையில், சென்னையில் உள்ள சட்ட உரிமைகள் குழு தேசிய பொதுசெயலர் ராஜலட்சுமி மன்தா ஏற்பாட்டில் 613 கிலோ கோவில் மணி, செம்பு உலோகத்தில் வடிவமைத்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமான், விநாயகர் விக்ரகங்கள் அடங்கிய ராமரத யாத்திரை வாகனம் அயோத்திக்கு செல்ல ராமேஸ்வரம் வந்தது.

ராமேஸ்வரம் கோவில் முன்பு பெரிய மணி, விக்ரகங்களுக்கு பூஜை செய்து தமிழக பாஜக., துணை தலைவர் நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.