மதுரையில் அதிர்ச்சி: அரிவாளால் வெட்டி வழிப்பறி! (சிசிடிவி காட்சி)

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
madurai-attack-theft1
madurai-attack-theft1

மதுரை இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்யும் இளைஞர்கள் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!

மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவர் விரகனூர் பகுதியில் பணியை முடித்துவிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே வந்தபோது பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் ராஜாவை பயங்கரமாக வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்!

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவர், வழிப்பறி கும்பல் மீது தனது வாகனத்தைக் கொண்டு மோதி, விபத்து ஏற்படுத்தி ராஜா மற்றும் உடன் வந்த வழிப்பறி கும்பலை பிடிக்க முயன்றார். அப்போது இருவரும் பயங்கர ஆயுதங்களால் அவரையும் தாக்கி விட்டு தப்பி ஓடினர்!

madurai-attack-theft2
madurai-attack-theft2

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜாவை மீட்ட பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்!

சம்பவம் குறித்து ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் காவல்துறையினர் அந்த பகுதி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது! மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.