ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
srivilliputur-temple-kodi
srivilliputur-temple-kodi

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி பெருமாள் கோவில் பிரமோற்சவ உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வட பெருங்கோயில் உடையான் என்று அழைக்கப்படும் வடபத்ரசாயி பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். அதுபோல் நிகழ்வாண்டில் புரட்டாசி பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வேத கோஷங்கள் முழங்க, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியினை வாசுதேவ பட்டர் ஏற்றினார்.

இன்றிலிருந்து 10 நாள் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. தினமும் காலை ஸ்ரீபெரிய பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக திருவீதி உலா நடைபெறாது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.