இந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்! முதலிரவில் வெளிப்பட்ட அதிர்ச்சி!

Published:

shaaji - 2026

கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நளினகுமாரி.. 36 வயதாகிறது.. இவரது கணவர் ஷாஜின் காந்தி… காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் நளினகுமாரி நாகை எஸ்பி ஆபீசில் புகார் ஒன்றினை தந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் சொல்லும்போது, “2012-ல் ஷாஜினை சந்தித்தேன்.. அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டது. காதலாக மாறியது.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, டைவர்ஸ் ஆன விஷயத்தை அவரிடம் சொன்னேன்..

அதற்கு பரவாயில்லை என்று சொல்லி, முறைப்படி வந்து பெண் கேட்டார்.. இந்துவான நான் கிறிஸ்டியன் மதம் மாற வேண்டும் என சொன்னார்கள்.. அதன்படி கிறிஸ்தவ மதம் மாறினேன்.. ஒரு சர்ச்சில் ஞானஸ்தானம் எடுத்து ஆனி லதா என மாற்றிக்கொண்டேன். இரு வீட்டிலும் 16.9.2013-ல் எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.

கல்யாணம் ஆன அன்றைய தினம் இரவு அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.. ஒரு பெண் அனுப்பியிருந்தார்.. அதனால் வேறு ஒரு பெண்ணுடன் ஷாஜிக்கு உறவு இருப்பதை அறிந்து கொண்டேன். மறுநாள் இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்தார்.. 2017-ல் நடந்த சண்டையின்போதுகூட என்னை இரும்புக் கம்பியால் அடித்து என் கை எலும்பு உடைந்துவிட்டது.

கேரள சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இந்த சமயத்தில், சென்ற வருடம் ஜனவரியில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் புகார் தந்துள்ளேன்” என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் ஷாஜின் மறுத்துள்ளாராம்.. தன் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார் என்றும் சட்டப்படி அதை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறாராம்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img