பாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்!

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
black circle - 2026

பாகிஸ்தானின் லாகூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வானத்தில் பட்டப்பகலில் கருப்பு நிற வளையம் தோன்றியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் வானத்தில் வளையங்கள் தோன்றி உள்ளது.நேற்று முதல் நாள் இந்த வளையங்கள் வானத்தில் தோன்றியது.காலை முதல் மாலை வரை இந்த வளையங்கள் வானத்தில் அப்படியே இருந்துள்ளது.

இந்த வளையங்கள் காரணமாக அங்கு மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக இணையத்தில் நிறைய வீடியோக்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

வானத்தில் பெரிய அளவில் கருப்பு நிறமாக இந்த வளையம் காட்சி அளித்துள்ளது. வெள்ளை நிற மேகத்திற்கு இடையில் இந்த வளையம் இருந்துள்ளது.

மிக முக்கியமாக இந்த வளையம் கொஞ்சம் கொஞ்சமாக இங்கும், அங்கும் நகர்ந்து சென்றுள்ளது. இது பார்க்க விசித்திரமாக இருந்துள்ளது. இதனால் இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வளையங்கள் ஒருவேளை ஏலியன்களால் ஏற்பட்டதா என்று மக்கள் சந்தேகம் கொள்ள தொடங்கினார்கள். இது எதுவும் ஏலியன் விமானமா என்று குழப்பம் அடைய தொடங்கினார்கள்.

அதே போல் பாகிஸ்தானின் வேறு சில பகுதியிலும் இந்த வளையம் தோன்றி உள்ளது. காஷ்மீரிலும் இந்த வளையம் தோன்றியுள்ளது. லண்டன் உள்ளிட்ட உலகின் வேறு சில இடங்களிலும் வளையம் தோன்றியுள்ளது.

இந்த நிலையில், இந்த வளையம் ஏதாவது புகை காரணமாக ஏற்பட்டு இருக்கலாம். உலகம் முழுக்க சில இடங்களில் இது ஏற்படும். தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் அதிகப்படியான புகை காரணமாக இப்படி ஏற்படலாம். அதேபோல் எங்காவது குண்டு வெடிப்பு, புகை போக்கி வெடிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இப்படி நடக்கும் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.