images 73 1 - 2026

சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை..

சற்றுமுன்
images 73 1 - 2026
#image_title

விருதுநகர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எலக்ட்ரிசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மதுரை மாவட்டம் மேலூர் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு என்ற அன்பரசன்(30)எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில், இவர் கடந்த 27.11.2019 ஆம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இவ்வழக்கு, விசாரணைக்கு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பூரணஜெயஆனந்த் குற்றவாளி அன்பரசனுக்கு10 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.