மின்கட்டணம்: ஜுன் 15 வரை நீட்டிப்பு!

சற்றுமுன் தமிழகம்
electric meter
electric meter

தாழ்வழுத்த மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத்தொகைகளை செலுத்த ஜூன் மாதம் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: சிறுகுறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறு குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை கேட்பு செலுத்தவும், தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.