ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத் த தயாரிப்பாளர்.

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத்த தயாரிப்பாளர்.

லாக்டௌன் நேரத்தில் சோனு சூட் புகழ் அசாதாரணமாக வளர்ந்துள்ளது. ஐநா சபை அவார்டு கிடைத்ததால் அவர் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளார்.

அப்படிப்பட்ட சோனு சூட்டை விட்டுவிடுவதற்கு யாரும் எண்ண மாட்டார்கள். சோனுசூட்டை வைத்து சினிமா எடுத்தால் ஃப்ரீயாக பப்ளிசிட்டி கியாரண்டியாக கிடைக்கும் என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால் சோனூவை ஹீரோவாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் பக்கா பிளானோடு களத்தில் குதித்துள்ளார்.

லாக்டௌன் நேரத்திலேயே போனில் ஓரளவுக்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. முக்கால்வாசி போன் உரையாடலிலேயே சோனூவை ஹீரோவாக வைத்து சினிமாவை கன்ஃபார்ம் செய்துள்ளாராம்.

அண்மையில் ஒரு சினிமா ஷூட்டிங்குக்காக சோனூ ஹைதராபாத்துக்கு வந்ததால் அந்த தயாரிப்பாளர் அவசர அவசரமாக சென்று சோனூவை சந்தித்துப் பேசியுள்ளார். தான் தற்போது வில்லனாக புக் ஆகியுள்ள சினிமாக்கள் வெளிவந்த பிறகுதான் ஹீரோவாக திரையில் வருவேன் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம் சோனு சூட்.

ஹீரோ, வில்லன் இவ்வாறு இரண்டு கப்பல்களில் பிரயாணம் செய்ய வேண்டுமென்று சோனு சூட் நினைக்கவில்லை. ஆனால் அந்த தயாரிப்பாளர் முதலில் ஹீரோவாக சினிமா அனௌன்ஸ் செய்யப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாராம். இரண்டு நாட்களில் தன் முடிவைக் கூறுவேன் என்றும் அதுவரை தனக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்துள்ளதாக வெளியிடவேண்டாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.

முதல் சினிமாவை அவசர அவசரமாக அறிவித்து விட வேண்டும் என்று எண்ணிய அந்த தயாரிப்பாளர் சோனுசூட்டின் புகழைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாரா? அல்லது நல்ல சப்ஜெக்ட்டோடு சினிமா எடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்ற விஷயம் இனிமேல்தான் தெரியும்.

Screenshot 2020 10 01 18 35 27 598 com.android.chrome - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.