சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.

Published:

சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.

பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு ஐநாசபை அவார்டு கிடைத்துள்ளது. ஐநா சபையின் துணை அமைப்பான சஸ்டைனபுள் டெவலப்மென்ட் கோல்ஸ் எஸ்டிஜி ஸ்பெஷல் ஹ்யூமானிடேரியன் விருது அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் லாக்டௌன் நேரத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்ததற்காக இந்த சிறப்பான கௌரவத்தைப் பெற்றுள்ளார்.

இந்த அவார்டை அவருக்கு ஒரு வர்ச்சுவல் நிகழ்ச்சி மூலம் திங்களன்று மாலை அளித்தார்கள்.

இதன்மூலம் ஐநா சபையின் அவார்டு பெற்றுக்கொண்ட ஏஞ்சலினா ஜூலி, டேவிட் பெக்ஹாம், லியோனார்டோ டி காப்ரியோ, பிரியங்கா சோப்ரா மற்றும் பல திரைப்பட பிரமுகர்கள் வரிசையில் சோனூசூட்டும் சேர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக பேசுகையில் இது ஒரு அரிதான கௌரவம். ஐநா சபையின் அவார்டு பெறுவது என்பது மிகவும் பிரத்தியேகமானது. நம் நாட்டு மக்களுக்கு நான் செய்யக் கூடிய மிகச் சிறிய உதவியை எனக்கு முடிந்த அளவில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்தேன். ஆனால் என் உதவிச் செயல்களை அடையாளம் கண்டு விருது கொடுப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. யுஎன்டிபி தன் நிலையான முன்னேற்ற இலக்குகளை (எஸ்டிஜி) சேர்வதற்கு நான் முழுமையாக உதவுவேன். இந்த அமைப்பின் செயல்கள் மூலம் மானுட ஜாதிக்கும் சுற்றுச்சூழலுக்கும் அதிக அளவு நன்மை கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Screenshot 2020 10 01 20 36 48 747 com.android.chrome - 2026

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img