பேராவூரணியில் பாடகர் எஸ்பிபி.,க்கு இசை அஞ்சலி!

Published:

spb-anjali-peravuran
spb-anjali-peravuran

பேராவூரணி: தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனியதுக்கு
இசை அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. 

மெய்ச்சுடர் ஊடகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு , இதழின் ஆசிரியர் நா.வெங்கடேசன் தலைமை வகித்தார். பாடகர் மகேஷ்ராஜா, இசையமைப்பாளர் பாலா, பாடகர் மகாலெட்சுமி, பாடகர் ராகவன் ஆகியோர் எஸ்.பி.பி.யின் பாடல்களை பாடி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக மக்கள் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் முனைவர் ஜீவா, மார்க்சிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர்கள் சித.திருவேங்கடம், தா.கலைச் செல்வன், தமிழ்வழிக் கல்வி இயக்கப் பொறுப்பாளர்கள் த.பழனிவேல், முருகேசன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், செய்சங்கர், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர் ஆயர் த.ஜேம்ஸ், ஆசிரியர் காஜா மைதீன் ஆகியோர் எஸ்.பி.பி.யின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

எஸ்பிபி திரையிசையில் 42000 பாடல்களுக்கு மேல் பாடி உலக சாதனை புரிந்துள்ளார், இசைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர், தனது துறையில் உச்சகட்ட சாதனையை புரிந்திருந்தாலும் எல்லோரிடமும் எளிமையாக பழகும் பண்பை கொண்டிருந்தார் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் புகழாரம் சூட்டினர்.

பங்கேற்ற அனைவரும் சேர்ந்து எஸ்பிபி பாடிய பாடலை பாடி அஞ்சலி செலுத்தியது காண்போரை நெகிழ வைத்தது.

  • செய்தி: ரவிச்சந்திரன் மதுரை
ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img