வலிமுற்றச் செய்துவிட்டீர் ஐயா!

அடடே... அப்படியா? கவிதைகள் லைஃப் ஸ்டைல்
gopalji-anjali
gopalji-anjali ராம்கோபாலன் ஜிக்கு வீரவணக்கம் மோட்சதீபம்.ஏற்றி வணங்கும் நிகழ்ச்சி வியாழன் மாலை 6.30க்கு..அவரின் ஆன்மா இறைவனை அடைய மோட்ச தீபம்.ஏற்றி சாந்தி செய்யப்பட்டது…ஸ்ரீமாந் முனீஸ்வர சாஸ்திரிகள் தலைமையில்! வேளச்சேரி தண்டீஸ்வர நகர் 10வது குறுக்குத் தெருவில்.

விதிகாலில் பட்டதுவோ உந்தன் தேகம்
வீணர்களைக் கலைத்தாயே மொத்தமாய் நீயும்

மதியெல்லாம் மலர வைத்தாய் இந்து ஏற்றம்
மயக்கத்தைத் தெளியவைத்து புரிய வைத்தாய்

உதியம் போல் பயன்படாமல் இருந்த மாக்கள்
ஓம் சொல்லி தொடங்கி வைத்தாய் எங்கள் தேவே

கதியற்றுக் கிடந்த எம்மை ஒன்று திரட்டி
காத்தாயே கனிவான எங்கள் கோவே

சதியுற்று மாய்த்ததுவோ விதியே இன்று- அந்த
சாமிக்கும் வேண்டியதோ உந்தன் சேவை???

குதியுற்றுப்.போனதுவோ உனது ஆன்மா- எம்
குலம் காக்க எவர் வருவார் உனைப்போல

நிதியற்றுப் போனாலும் கவலை கொள்ளோம்
நீயின்றிப் போனதுதான் கண்ணீர் ஐயா

நலிவுற்றுப் போகாமல் காத்தாய் ஐயா
நாட்டுக்கே அர்பணித்தாய் உனது தொண்டு

கலிமுற்றி போனதந்தன் அர்த்தம் தானோ
கதைமுற்றுப் போனதையா உனக்கே இன்று

பொலிவற்று போய்விடுமே உனது நாடு
பூகம்பம் இதயத்துள் தந்தாய் ஏனோ

வலிமுற்றச் செய்துவிட்டீர் ஐயா நீங்கள்
வணங்குகிறேன் வணங்குகிறேன் கண்ணீர் கொண்டு..

  • கவிஞர் எஸ்.சுவாதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.