ராம.கோபாலனுக்கு நெல்லை இந்து முன்னணி நடத்திய சிரத்தாஞ்சலிக் கூட்டங்கள்!

Published:

nellai-town1
nellai-town1

மறைந்த இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் ராம கோபாலனுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ராம கோபாலன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

nellai-town
nellai-town

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவையொட்டி நெல்லையில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை டவுனில் இந்து முன்னணி, இந்து மகா சபா, விசுவ இந்து பரிஷத், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் ராமகோபாலன் படத்துக்கு மோட்ச தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து முன்னணி மாநில பேச்சாளர் காந்திமதிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கர், செயலாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் மகாராஜன், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஆறுமுகக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெரு முக்கில் ராமகோபாலன் படத்துக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் உடையார், நிர்வாகிகள் கணேசன், பரமசிவன், காளிசாமி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

nellai-sudhamalli1
nellai-sudhamalli1

வீரதுறவிக்கு வீர அஞ்சலி!!!

இந்துமுன்னனி பேரியக்கத்தின் தலைவர் வீரத்துறவி ராம.கோபாலன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. மௌன அஞ்சலியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து முன்னனி மானூர் மண்டல தலைவர் குமார் செய்திருந்தார்….

இதில் இந்து முன்னனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நமசிவாயம், பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரப் பிரிவு மாவட்டச் செயலாளர் நா.மணிகண்ட மகாதேவன், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் இராமகோபாலன் வாழ்க்கை வரலாற்றைப் பேசினர்…

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

நிகழ்ச்சியில் பாஜக மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் அங்குராஜ் இந்துமுன்னனி மண்டல செயலாளர் செந்தில்குமார் ஒன்றிய தலைவர் அழகுசெல்வம் இந்துமுன்னனி ஒன்றிய துணை தலைவர் முருகன், இந்துமுன்னனி ஒன்றிய செயலாளர் லெட்சுமி நாராயணன்., இந்து ஆட்டோ முன்னனி சுத்தமல்லி தலைவர் முருகன், பாஜக மானூர் தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் கண்ணன், பாஜக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பாஜக ஒன்றிய துணை தலைவர் முத்துக்குமார், பாஜக நெல்லை மேற்கு மண்டல் துணை தலைவர் அனந்த ராம சுப்பிரமணியன், மானூர் ஒன்றிய பாஜக பொருளாளர் கணேசன் , பாஜக சுத்தமல்லி கிளை தலைவர் பிரமநாயகம், சுத்தமல்லி பேச்சிமுத்து கோமதி நகர் நிர்வாகிகள் சண்முக சுந்தரம் சௌந்தரபாண்டி, ஹரீஷ்குமார், விஸ்வநாத நகர் சண்முக சுந்தரம், ராசுகுட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.!

nellai-sudhamalli
nellai-sudhamalli

அம்பை

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவையொட்டி, கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அலங்கரிக்கப் பட்ட அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கமலா, மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் மூர்த்தி, மண்டல தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை கல்யாணி திரையரங்கம் எதிரில் அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து முன்னணி நகர தலைவர் ராமசாமி, செயலாளர் சுடலை, ஒன்றிய தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அம்பை பூக்கடை பஜாரில் அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் படத்துக்கு பா.ஜ.க. அரசாங்க பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பண்டியன், மாவட்ட செயலாளர் பால் பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரம் நகர இந்து முன்னணி சார்பாக, நகர தலைவர் முருகன் தலைமையில், ராமகோபாலன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இட்டமொழி பஸ் நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சியில், இந்து முன்னணி நிர்வாகி ஆர்தர், பா.ஜனதா நிர்வாகிகள் ரவிக்குமார், பட்டுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ராமகோபாலன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இட்டமொழி புதூரிலும் ராமகோபாலனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் ராமநாதன், நகர செயலாளர்கள் செல்வராஜ், மாரியப்பன், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் நாலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே, அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் உருவப்படத்திற்கு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் பெரிக்குழைக்காதர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கோட்ட தலைவர் தங்க மனோகர், மாவட்ட தலைவர் ஹரி சுடலைமுத்து, இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பரமசிவம், பா.ஜனதா மாவட்ட செயலாளர் குமார முருகேசன், வக்கீல் பிரிவு செயலாளர் ராம்நாத், வள்ளியூர் நகர செயலாளர் ராமகுட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி / வள்ளியூர்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பில், டூவிபுரம் 5 ஆவது தெருவில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் மாவட்ட தலைவா் எஸ். இசக்கிமுத்துகுமாா் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி.எம். பால்ராஜ், இந்து வியாபாரி சங்க மாநிலத் தலைவா் ஈஸ்வரன், பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை தலைவா் எஸ்.ஆா்.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

தூத்துக்குடி தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில், புதுக்கோட்டையில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தபட்டது.

நிகழ்ச்சியில், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் எம். பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினா் ஏ. சந்தானகுமாா், மாநில பொதுகுழு உறுப்பினா் கே. முனியசாமி, மாவட்ட வா்த்தக பிரிவு செயலா் முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதே போல், உடன்குடி, சாத்தான்குளம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது

புதுக்கோட்டையில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவிற்கு தூத்துக்குடி தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் புஷ்பாஞ்சலி செலுத்தபட்டது.

நிகழ்வில், முன்னாள் மாவட்ட தலைவர் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், மாநில பொதுகுழு உறுப்பினர் முனியசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முனியசாமி, மாவட்ட துணை தலைவர் கலாதேவி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஜெபகுமார், மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் முத்துகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் செல்வபாலன், ஒன்றிய பொது செயலாளர் விஷ்வா, ஒன்றிய OBC அணி சங்கர நாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மாரிமுத்து, கிளை தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் நாகராஜ், செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

Related articles

Recent articles

spot_img