
பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஆசி பெற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வருகை தந்த தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் பங்காரு அடிகளாரை சந்தித்து அவரிடம் ஆசிபெற்றார்.
தேர்தல் வருவதை முன்னிட்டு தற்போது தமிழகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் தங்களது பேட்டிகள் வாயிலாக அரசியல் களத்தில் சூடு ஏற்படுத்தி வருகின்றனர் குறிப்பாக திமுக அதிமுக இரண்டு அணிகளின் கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் அலசப்பட்டு வருகின்றன
பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் அளித்த பேட்டியில் தமிழகத்தில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி ஏற்படலாம்! தற்போது அமைந்துள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கானது. சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தேர்தல் நேரத்தில் அமையும். அது திமுக.,வோ அதிமுக.,வோ அல்லது தனித்தோ கூட அமையலாம் என்று குறிப்பிட்டிருந்தார் இதையடுத்து திமுக உடன் கூட்டணியா என்று பாஜகவின் உறுப்பினர்கள் பலர் கோபமடைந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அதிமுகவுடனான தற்போதைய கூட்டணி தொடரும் என குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
பாஜக சார்பில் நவம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கும் வெற்றிவேல் யாத்திரைக்கான முத்திரை வெளியீட்டு நிகழ்ச்சி கமலாலயத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகனிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைய கூட்டணி தொடரும் என்றார். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு ஏற்கெனவே தான் வரவேற்பு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அவர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்