முதலாளி சம்பளம் தரல… மிஷினில் தலை வைத்து உயிரிழந்த இளைஞர்!

Published:

crime-scene
crime-scene

மதுரை திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி ராஜமான் நகரில் முதலாளி சம்பளம் தராததைக் கண்டித்து மிஷினில் தலையை வைத்து இளைஞர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி அருகே உள்ள ராஜமான் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 35) கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

பாலமுருகன், முதலாளி சம்பளம் தராவில்லையென கூறப்படுகிறது. இதை அடுத்து, அலுமினிய பட்டறை மிஷினில் தலையை வைத்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதலாளி சம்பளம் தராததை கண்டித்து மிஷினில் தலை வைத்து பாலமுருகன் இறந்த செய்தி இப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img