மதுரை அருகே அதிமுக எம்எல்ஏ., வருகையால்… போக்குவரத்து நெரிசல்!

Published:

madurai-traffic
madurai-traffic

அலங்காநல்லூர்: மதுரை அருகே அலங்காநல்லூருக்கு அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் வருகையால் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கத்தை அதிமுக தலைமை வழிகாட்டு குழுவில் இணைத்தது. இதையடுத்து, மாணிக்கம் எம்எல்ஏ , அலங்காநல்லூரில் முனியாண்டி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. தகவல் கிடைத்ததும், அலங்காநல்லூர் போலீஸார் வந்து, முனியாண்டி கோயில் பகுதியில் மெயின் ரோட்டில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

இருப்பினும், எம்எல்ஏ ஒருவரால் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பலர் சிரமப்பட்டது, அப் பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்தது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img