குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு !

Published:

courtallam-falls-flood
courtallam-falls-flood

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கடந்த சில நாட்களாகவே தென்காசி செங்கோட்டை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிக்கு நீர்வரத்து வரக்கூடிய நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து இதன் காரணமாக குற்றால அருவிகளில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது

courtalla-oct13
courtalla-oct13

ஏற்கனவே  கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் எவரும் அருவிக்கரை பக்கம் அனுமதிக்கப்படுவதில்லை குளிப்பதற்கும் இங்குள்ள அருவிகளில் தடை உள்ளது என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது!

Related articles

Recent articles

spot_img