உண்மையைக் கூறும் ஊடகங்கள் தான் நாட்டின் மிகப் பெரும் சக்தி : இ.மதுசூதனன்

சற்றுமுன் தமிழகம்
உண்மை நிலைகளை எழுதும் பத்திரிக்கை ஊடகங்கள் தான் நாட்டின் மிக பெரிய சக்தி என்று
அவைத்தலைவர் இ.மதுசூதனன் கூறினார்.
நேற்று இரவு கடலூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் கலந்து கொண்டு   
சசிகலா குடும்பத்தை விமர்சனம் செய்து சிறப்புரையாற்றி பேசியதை திரித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் போன்ற கொள்ளை கும்பலுக்கு ஆதரவு தெரிவித்து பேசியதாக அணிகளில் குழப்பத்தை ஏற்படுத்திவரும் சில சமூக வளையதள செய்திகளுக்கு தனது  கண்டனத்தை தெரிவித்தார். 
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டி காத்த அதிமுக என்ற கட்சியை யாராலும், எவராலும், அழித்துவிடமுடியாது. அப்படி யாரேனும் நினைத்தால் அவர்களது கணவு கோட்டை தகர்த்து எரியப்படும் எனவும் 
உண்மை நிலைகளை எழுதிவரும் பத்திரிக்கை ஊடகங்கள் மட்டுமே நாட்டின் அரசியலுக்கு அப்பாற்பட்டு மிகப்பெரிய பலமான சக்தியாக விளங்குவதாக தெரிவித்தார் மதுசூதனன். 
செய்தி… பாஸ்கரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.