விஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ!

சற்றுமுன் தமிழகம் மதுரை
kadambur-raju
kadambur-raju

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் திரையரங்கை திறப்பது குறித்து இரண்டு நாட்களில் முதலமைச்சருடன் நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

விஜய் சேதுபதியின் 800 பட சர்ச்சை குறித்து கேட்ட கேள்விக்கு முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டார், விஜய் சேதுபதி அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இது முடிந்து போன விஷயம். அது பற்றி பேச வேண்டியதில்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.