October 12, 2024, 8:05 AM
27.1 C
Chennai

விஸ்வாசம்… கண்ணான கண்ணே… பாடல் பற்றி கவிஞர் தாமரை!

இன்று தல அஜித் ரசிகர்களின் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது விஸ்வாசம்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே ‘… பாடல் தாலாட்டுப் பாடலாகவும் அதே நேரம் ஜீவனுள்ள உணர்ச்சிப் பாடலாகவும் வெளிப்பட்டுள்ளது. பாடலை எழுதிய கவிஞர் தாமரை இந்தப் பாடல் குறித்து தெரிவித்தவை…

கண்ணான கண்ணே பாடல் சென்ற வாரம் பாடல் வரிக் காணொலியாக வெளியிடப்பட்டு, இன்றுவரை 60 லட்சம் பேரால் (6 மில்லியன்) பார்க்கப்பட்டு பெருவெற்றி அடைந்திருக்கிறது. பாடல் எல்லோருக்கும் பிடித்திருப்பதால் எனக்கு பாராட்டுமழைதான்!.

இயக்குநர் ‘சிறுத்தை சிவா’ அவர்களுக்கு நான் எழுதும் முதல் படம். வழக்கம்போல, கதை முழுவதும் கேட்டுவிட்டே எழுதினேன்.

கதை சொல்ல வீட்டிற்கு வந்திருந்தார். அவரது தோற்றத்திற்கும் குரலுக்கும் பேச்சுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவ்வளவு மென்மையான குரல் !. மிகவும் தாழ்ந்த குரலில் பேசியதால் என்பாடு திண்டாட்டமானது. “கொஞ்சம் சத்தமாப் பேசுங்க” என்று அவ்வப்போது வேண்டிக் கொண்டேன்.

இயல்பாகவே அப்படித்தானாம். படப்பிடிப்பில் எப்படி சமாளிக்கிறார், மற்றவர்கள் இவரை எப்படி சமாளிக்கிறார்கள், ஒலிபெருக்கி வைத்துக் கொள்வீர்களா என்றெல்லாம் கேட்டு, வியந்து கொண்டிருந்தேன்.