புதிய மாவட்டங்களில்… என்ன என்ன சட்டமன்றத் தொகுதிகள்..? தேர்தல் ஆணையம் வெளியீடு!

சற்றுமுன் சென்னை தமிழகம் நெல்லை பொது தகவல்கள்
tamilnadu secretariat - 2026

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் என்ன என்ன என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.  

தமிழகத்தில் அன்மையில் நிர்வாக வசதிக்காக சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன இவ்வாறு உருவான புதிய மாவட்டங்களில் வருவாய் வட்டங்கள் கோட்டங்கள் ஆகியவை நிர்வாக ரீதியாக அமைக்கப்பட்டன இந்நிலையில் இந்த புதிய மாவட்டங்களில் எந்த எந்த சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறும் என்பது குறித்து இன்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது 

இதன்படி புதிதாகப் பிரிக்கப் பட்ட  செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன.  சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

வேலூர் மாவட்டத்தில், காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.