நெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சற்றுமுன் தமிழகம் நெல்லை
Regional Meteorological Center 1 1
Regional Meteorological Center 1 1

நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்:

கன்னியாகுமரி உள்ளிட்ட ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாதகமான நிலை தற்போது இல்லை. அக்டோபர் 30-ந்தேதிக்கு மேல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது.

தற்போது ஒரு மேலடுக்கு சுழற்சி தமிழகத்தையொட்டி உருவாகியுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.