படைவீரனுக்கு பதிலாக சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தலாமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்த அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அதற்கு பதிலாக ஊழலை சட்டப்பூர்வமாக்குவதாக அறிவித்து விடலாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், “லோக் ஆயுக்தா அமைப்பு எப்படி இருந்து விடக்கூடாது என்று அச்சம் தெரிவித்திருந்தேனோ, அதே போன்று தான் உருவாக்கப்பட உள்ளது என்றும் கூறினார். மேலும், “கோட்டையைக் காவல் காப்பதற்காக வலிமையும், வீரமும் மிக்க படைவீரனை நிறுத்துவதற்கு மாற்றாக சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தினால் எப்படி இருக்குமோ, அதேபோன்று தான் தமிழக அரசு உருவாக்கவுள்ள லோக் ஆயுக்தாவும் அமையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.



