அரசுப் பள்ளி மாணவர்க்கு 7.5 சத ஒதுக்கீடு வழங்கிய ஆளுநரை சந்தித்து பாஜக., நன்றி!

Published:

tn-bjp-met-governor
tn-bjp-met-governor

இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அனுமதி அளித்ததற்கு தமிழக பாஜக., சார்பில் நன்றி தெரிவித்தனர்.

பாஜக., மாநிலத் தலைவர் எல்.முருகன்,  மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா மற்றும் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்‌ ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து, தங்களது நன்றியைத் தெரிவித்தனர். 

முன்னதாக, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கும், அரசாணை பிறப்பித்த தமிழக அரசுக்கும் உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது..

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் மாணவர் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது பல்வேறு அரசியல் நகர்வுகள் இருந்தன.  அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் 3 முதல் 4 வார கால அவகாசம் கேட்டுள்ளார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் ஆளுநர் மனசாட்சிப்படி விரைந்து முடிவெடுக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இந்நிலையில், உள்ஒதுக்கீடு அவசர சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அக். 29-ல் தமிழக அரசு ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து மறுநாள் அவசர சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அவசர சட்டத்தின் மீது விரைவில் முடிவெடுத்த ஆளுநர் மற்றும் தமிழக அரசை நீதிமன்றம் பாராட்டுவதாகவும், இந்த அவசர சட்டத்தால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை நினைத்து நீதிமன்றம் மகிழ்ச்சியடைவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img