ஸ்டாலின் இனி சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டாம், மதுரை எய்ம்ஸிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது…
தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள இருக்கிறோம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் கோவிட் 19 தடுப்பு பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார் அதனைத் தொடர்ந்து இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் தலைமையில் கடந்த மாதம் 12ம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
அதில் தமிழகம் முழுவதும் பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் 321 பகுதிகள் 5 அடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளாகவும், 797 பகுதிகள் 3 அடி முதல் 5 அடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளாகவும், 1096 பகுதிகள் 2 அடி முதல் 3 அடி வரை வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளாகும் ,1919 பகுதிகள் 2அடி குறைவான வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளாகும் ஆக மொத்தம் 4,133 பாதிப்புக்கு உள்ளான தாழ்வான பகுதிகளை முதலமைச்சர் கண்டறிந்து அதற்குரிய தகுந்த அறிவுரை வழங்கிஅதில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மண்டல குழுக்கள் அமைத்துள்ளார்
கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ள சேதம் ஏற்பட்டபோது தாழ்வான பகுதிகளிலிருந்து வசிக்கும் மக்களை தங்க வைக்கும் வண்ணம் 539 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கி அதன் மூலம் 1,52,088 நபர்கள் தங்க வைக்கப்பட்டனர் தற்போது சமூக இடைவெளி கடைபிடிக்கும் வண்ணம் 9,393 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதன் மூலம் 7,39 ,450 நபர்கள் தங்க வைக்க முடியும்
மேலும் 14,232 பெண்கள் உள்ளிட்ட 43,409 எண்ணிக்கையிலான முதல் நிலை மீட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர் ,கால்நடை பாதுகாக்க 8,871 முதல்நிலை மீட்பாளர்களும், தயார் உள்ளனர் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரிடம் பயிற்சிபெற்ற 5505 காவலர்கள் மற்றும் 691 ஊர்காவல் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின்கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும், 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது 3,094 கல்வி நிறுவனங்கள், 2561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளான 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11,482 கசிவு நீர்க் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன 9,616 ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன .
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பர் முடிய சராசரியை விட 24 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது ஆண்டு சராசரி மழை அளவு 341.9 மில்லிமீட்டர் ஆனால் இந்த வருடம் 424.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது
இதில் 6 மாவட்டங்களில் மிக அதிகப்படியான மழை அளவு பதிவாகி உள்ளது, 18 மாவட்டங்களில் அதிகப்படியான மழை அளவு பதிவாகி உள்ளது, 11 மாவட்டங்களில் இயல்பான மழை அளவு பதிவாகி உள்ளது, 2 மாவட்டங்களில் குறைவான மழை அளவு பதிவாகி உள்ளன.
பொதுவாக தென் மேற்கு பருவமழை கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு பருவமழை மட்டும்தான் தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்கும் இந்த வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இருக்கும் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் கடலோர மாவட்டங்களில் இந்த பருவ மழை தாக்கம் அதிகமாக இருப்பதோடு மாநிலத்தின் இயல்பான மழை அளவில் 47.32 விழுக்காடு மழையளவு கிடைக்கப்பெறுகிறது.
இந்த ஆண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3.10.2020 பெய்யவேண்டிய வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சில காலமாய் 28.10.2020 அன்று தொடங்கி உள்ளது இருப்பினும் இந்த மாதம் 1.10.2020 முதல்2.11.2020 முறை இயல்பான மழை அளவு 183.7 மில்லி மீட்டர் ஆனால் 100.9 மில்லிமீட்டர் அளவு தான் பெய்துள்ளது இது 45 சகவீதம் பற்றாக்குறையாகும்.
தமிழகத்தில் 4 ஆம் தேதி முதல் 5 தேதி வரை ஆகிய நாட்களில் மதுரை ,விருதுநகர், சிவகங்கை ,கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, கூடல் புதூர் பனங்காடி உள்ளிட்ட 27 தாழ்வான பகுதிகளை கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழனால் உருவாக்கப்பட்ட குடிமராமத்து திட்டத்தினை முதலமைச்சர் பருவ மழைக் காலத்திற்கு முன்பே செய்து நீர் மேலாண்மையில் ஒரு புதிய புரட்சியை படைத்துள்ளார்
இதன் மூலம் பொதுப்பணித்துறை உள்ளாட்சித்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான ஏரி, கண்மாய் எல்லாம் தூர்வாரப்பட்டு பருவமழையால் கிடைக்கும் மழைநீரை 100 சகவீதம் குடிநீருக்காகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அதுமட்டுமில்லாது இந்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் 7.53 கோடி கனமீட்டர் வண்டல்மண்ணை எடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்ததால் 6,70,864 விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் இதன் மூலம் கூடுதலாக 2.55 டிஎம்சி நீரினை சேமிக்க வழிவகை செய்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மழை பொழிவை எடுத்துக்கொண்டால் 2015ஆம் ஆண்டு1212 மில்லி மீட்டர் மழையும், 2016ம் ஆண்டு 539 மில்லி மீட்டர் மழையும், 2011ம் ஆண்டு 975 மில்லி மீட்டர் மழையும் 2018ஆம் ஆண்டு 789 மில்லி மீட்டர் மழையும் 2019-ம் ஆண்டு 905 மில்லி மீட்டர் மழையும் வடகிழக்கு பருவமழையில் பெய்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழக அணைகளின் நீர் கொள்ளளவு ஒப்பிட்டு பார்த்தால் மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, ஆழியாறு, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் அணைகளில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு நீர் கொள்ளளவு அதிகமாக உள்ளது ஆனால் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெருஞ்சாணி ,சோலையாறு,வைகை மற்றும் சாத்தனூர் அணை நீர்மட்டம் சற்று குறைவாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் நீர்த்தேக்கங்களில் கொள்ளவு கடந்த ஆண்டு கொள்ளளவை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் 1076 கிலோ மீட்டர் நீண்ட கடலோர பகுதிகளை கொண்டுள்ளது இது நாட்டின் மொத்த கடற்கரையின் நீளத்தில் 18 சதவீதம் ஆகும்
இந்தப் பருவமழையில் ஒரு உயிர் சேதம் கூட ஏற்படக்கூடாது என்று முதலமைச்சர் கடந்த 30 ஆண்டுகளில் மழை பொழிவை கருத்தில்கொண்டு தேவையான நடவடிக்கை தற்போது முதலமைச்சர் எடுத்து வருது மட்டுமல்லாது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இந்த வடகிழக்கு பருவ மழையால் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் தொற்றுநோய் வராத வண்ணம் நடவடிக்கை, வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் அறிவிப்புகளின் அடிப்படையில் பணிகள் நடைபெறுகிறது.
இந்தாண்டு கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவமழையை இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டி உள்ளது, இரண்டு பேரிடையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவது மிகப்பெரிய சவாலாக உள்ளது,
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை அறியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது அதேபோல் சாலை வசதியும் போடப்பட்டு உள்ளது தற்போது ஜப்பான் நிறுவனம் பலமுறை அந்த இடத்தை அங்கு செய்துள்ளது விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்
அதிமுக அரசை குறை சொல்வது தான் ஸ்டாலினின் பணியாக உள்ளது, ஸ்டாலின் வெளிநாடுகளில் சிகிச்சை எடுக்க தேவையில்லை… மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம்,
கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் காய்கறி விளைச்சல் அதிகம் ஸ்டாலினின் அறிக்கைகள் வாடிக்கையான வேடிக்கையான அறிக்கைகள் உள்ளது,
தமிழக அரசின் சாதனைகளை ஸ்டாலினால் மறைக்க முடியாது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறார்
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டசபையில் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வரவில்லை, பொது மன்றத்தில் பேசவில்லை ஆனால் முதலமைச்சர் சிந்தனையில் உதித்து அதன்மூலம் சமூக நீதி காத்த சமூகநீதிக் காவலர் முதலமைச்சர் பெற்ற வெற்றியை ஸ்டாலின் ஒருபோதும் பங்கு போட முடியாது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்
ஸ்டாலினால் தமிழக மக்களுக்கு எந்தவொரு நல்ல காரியமும் நடக்கவில்லை, இனியும் நடக்க போவதில்லை, தீபாவளி பண்டிகையை மக்கள் மிக கவனத்துடன் கையாள வேண்டும்,
பசும்பொன்னில் திருநீறு வாங்குவதில் நம்பிக்கை இல்லை என்றால் திருநீற்றை வாங்காமல் இருந்து இருக்கலாம், ஸ்டாலினின் செயல் பல பேருக்கு மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது” என கூறினார்.