விருதுநகர்: விருதுநகர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில், அயுஷ்மான் பாரத் முகாமானது, முத்துலாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு விருதுநகர் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் எஸ்.எஸ். நாகராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் கோபால், ஜெபகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் , 150 நபர்களுக்கு ரூ. 5 லட்சம் பெறுமான காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரை ராஜா, மாவட்டப் பொருளாளர் சசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.