கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது 4 ஆவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.
16 போட்டியாளர்களில், நடிகர் ஆரி, நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி, மாடல் பாலாஜி இவர்கள் 2 பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் விஜய் டி.வி யின் பிராடக்ட் என்று தான் சொல்ல வேண்டும்.
“அணுவளவும் பயமில்லை” என்ற நிகழ்ச்சியில் மாடல் சம்யுக்தாவும் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக 16 போட்டியாளர்களில் 14 போட்டியாளர்களும் விஜய் டிவி மூலம் பிரபலம் ஆனவர்கள் என்றே சொல்லலாம்.

சரி அதுக்கு என்ன இப்ப அப்டின்னு கேட்க தோணுது இல்லையா? அதாவது 4 ஆவது வாரமான இந்த வாரம், யார் எலிமினேட் ஆறாங்க என்ற கேள்வி எழுகிறது அல்லவா? பாடகர் வேல்முருகன் தான் எலிமினேட் ஆனவரு. இந்த வாரம்.இவர் மக்கள் ஆதரவு குறைவாக உள்ள போட்டியாளர்களில் கடைசி இடத்தை பிடித்து உள்ளாராம். அதன் காரணமாக இந்த வாரம் பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இவர் விஜய் டிவி யில் ஒளிபரப்பான யார் மனசுல யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் தவிர்த்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் மற்ற பல சுவாரஸ்யங்கள் என்ன வென்றால், முக்கோண வடிவில் பாலாஜி மீது லைட்டா ஒரு crush 3 பேருக்கு வந்துள்ளது. அதாவது கேப்ரில்லா ஒரு பக்கம், மாடல் சனம் ஒரு பக்கம், அடுத்ததாக ஷிவானி இன்னொரு பக்கம் இப்படி இந்த 3 பேருமே, மாடல் பாலாஜி மீது தனி கவனம் செலுத்தி வருவதால், என்னடா இது….முக்கோண வடிவ காதலா? என பிக்பாஸ் பார்வையாளர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் 4வது சீசனில் பாடகர் என்ற அடையாளத்துடன் வீட்டில் நுழைந்தவர் வேல்முருகன். இவர் நீண்டநாள் வீட்டில் தாக்குபிடிப்பார் என்று பார்த்தால் 4வது வாரத்தில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் சிலருக்கு வருத்தம் தான், அவர் வீட்டில் இருந்து போராடியிருக்கலாம் என்பது ரசிகர்களின் எண்ணம்.
வெறும் பாடகர் என்று மட்டும் தான் நமக்கு தெரியும், அந்த பாடல் துறையில் பல சாதனைகள் செய்து வேல்முருகன் பெற்றிருக்கும் விருதுகள் பற்றி தெரியுமா?. அவர் 10க்கும் மேற்பட்ட உயரிய விருதுகள் வாங்கி சாதனை செய்துள்ளார்
Source: Vellithirai News



