
பிரபல தயாரிப்பாளர் KJR ல்டுடியோ உரிமையாளர் ராஜேஷ் பாஜகவில் இணைந்தார். இவர் கபெ ரணசிங்கம் படத்தை தயாரித்தவர்!
கபெ ரணசிங்கம் படத்தின் தயாரிப்பாளரும், KJR ஸ்டுடியோ உரிமையாளருமான கோட்டபாடி ராஜேஷ் பாஜகவில் இணைந்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வரும் நிலையில், பாஜகவும் உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறது.
முக்கியமாக, திரைத்துறையை சேர்ந்த பலர் பாஜக.,வில் இணைந்து வருகின்றனர். அண்மையில் யாருமே எதிர்பார்த்திராத வகையில் நடிகை குஷ்பு பாஜக.,வில் இணைந்தார். முன்னதாக, பாடகர் மோகன் வைத்யா, காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் உரிமையாளருமான கோட்டபாடி ஜே.ராஜேஷ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜக.,வில் இன்று இணைந்துள்ளார். இவர் க.பெ ரணசிங்கம், ஹீரோ, அறம், குலேபகாவலி, ஐரா உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர்.