தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர் 132 பேர் கைது செய்யப் பட்டனர். இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கரூரில் பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் பேருந்து நிலையம் தபால் தந்தி அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆர்ப்பாட்டம் நீடித்தது அப்போது மழை தூறியது. இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனையொட்டி மறியலில் ஈடுபட முயன்ற 10 பெண்கள் உட்பட 132 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது