மதுரை மாவட்டம் குருவித்துறை குருபகவான் கோவிலில் நேற்று இரவு குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குருபகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று விழா மிக சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. கொரோனா தொற்று நோய் காரணமாக அரசு அறிவித்த விழிப்புணர்வு உத்தரவின்படி சுகாதாரத் துறையினர் முன் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை வைகை ஆற்றங்கரையில் சித்திரரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கே குரு பகவான் பெருமாளை நோக்கி தவக் கோலத்தில் உள்ளார். இவர் அருகே சக்கரத்தாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று குருபெயர்ச்சி விழா மூன்று நாள் மிகச்சிறப்பாக நடைபெறும்.
இதேபோல் இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை லட்சார்ச்சனை ஆரம்பித்து நேற்று முந்தினம் இரவு வரை லட்சார்ச்சனை நடந்தது. நேற்று இரவு 7 மணி அளவில் மகாயாகம் ரெங்கநாத பட்டர் ஸ்ரீதர் பட்டர் சடகோப பட்டர் ஸ்ரீ பாலாஜி பட்டர் ரகுராமன் பட்டர் ஆகியோர் பரிகார யாக பூஜை நடத்தினர். பின்னர் அர்ச்சகர்கள் புனித நீர்க் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர்.
இரவு 9 47 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி ஆவதால் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் பரிகார அர்ச்சனை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அனைத்து ராசிகளுக்கும் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டது
இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திமுக மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, மதுரை கோட்டாட்சியர் முருகானந்தம், அழகர் கோவில் துணை ஆணையர் அனிதா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, சோழவந்தான் பேரூர் செயலாளர் கொரியர் கணேசன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் தொகுதிக் கழகச் செயலாளர் சி பி ஆர் சரவணன், வாடிப்பட்டி கார்த்தி ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன் மாறன் ரேகா வீரபாண்டி, இளைஞர் அணி வெற்றி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மன்னாடிமங்கலம் பவுன் முருகன் குருவித்துறை ரம்யா நம்பிராஜன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி துணைத்தலைவர் கேபிள் ராஜா, மன்னாடிமங்கலம் ராஜபாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
விழா ஏற்பாடுகளை தக்க வெண்மணி கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆலய பணியாளர்கள் வெங்கடேசன் கிருஷ்ணன் மணி நாகராஜன் ஆகியோர் செய்தனர் இவ்விழாவில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்து பக்தர்கள் அதிகமாக வருவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
சுகாதாரத் துறை சார்பாக வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் தலைமையிலும் வருவாய்த்துறை தாசில்தார் பழனிகுமார் தலைமையிலும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஸ்ரீநிவாசன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனுசாமி சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் விழா குறித்து விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்திருந்தனர்
கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா டிஎஸ்பி கள் ஆனந்த ஆரோக்கியராஜ் ஈஸ்வரன் ராஜன் இன்ஸ்பெக்டர்கள் வசந்தி கிரேசி சோபியா பாய் உட்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.