புதுக்கோட்டை அருகில் அருள் பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு மற்றும் ஐப்பசி மாத நிறைவு மண்டகப்படிவிழா சிறப்புடன் நடைபெற்றது
15.11.2020அன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ மூனீஸ்வரர் சுவாமிக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் பன்னிர் இளநீர் புண்ணிய தீர்த்த அபிஷேகம் நடைபெற்று வடைமாலை மற்றும் மலர் அலங்காரத்துடன் தீபாராதனை வெகுசிறப்புடன் நடைபெற்றது
புதுக்கோட்டை ஆலங்குடி, திருவரங்குளம் சுற்று புறங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து சாமிதரிசனம் செய்தனர். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப் பட்டது ஏற்பாடுகளை இந்துசமயஅறநிலையத்துறை நிர்வாகத்தினர் மற்றும் பழனியப்பன்பூசாரி தலைமையிலும் விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்தனர்
புதுக்கோட்டைகீழ 3ம் வீதியில் உள்ள மாநில நல்லாசிரியர் விருது பெற்ற முன்னாள் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஜோதிடர் என். கோபாலக்கிருஷ்ணா சர்மா குருபெயர்ச்சி பற்றிக்கூறினார் .
இந்த குரு பெயர்ச்சியினால் பரிகாரம் செய்துகொள்ளவேண்டிய ராசிகள்: 1) மேஷம், 2) மிதுனம், 3) சிம்மம், 4) துலாம், 5) விருச்சிகம், 6) மகரம், 7) கும்பம். தனுசு ராசியிலிருந்து மகரராசிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார்.
குரு பார்வையால் சார்வரி ஆண்டில் யாருக்கு யோகம் வரும்:
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு தனது பொன்னான பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளைப் பார்க்கிறார். குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார்.
அங்கிருந்து குரு பகவான் ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது பார்வையை வீசப்போகிறார். குருவின் சஞ்சாரம் பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை பலனடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம். குருவிற்கு ஐந்து,ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உண்டு.
இந்த பார்வைகளால் அந்த ராசிகள் சிறப்பான பலன்களை அடைவதோடு ஒவ்வொரு ராசிக்கும் அமையும் வீடுகளைப் பொருத்து பலன்கள் மாறுபடும். குருவின் பார்வையால் சிலருக்கு ஆரோக்கியம் கூடும் ஆயுள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
பண வரவும் அதிகமாக கிடைக்கும். குரு பகவான் மகரம் ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக ரிஷபம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக கன்னி ராசியை பார்க்கிறார்… என்றும் அவர் கூறினார்
- செய்தி: டீலக்ஸ் சேகர்