மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். MBBS ரேங்க் பட்டியலில் மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார்.
நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 3650 மருத்துவ இடங்களுக்கு 34,424 பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று காலை இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டர்.
இந்தப் பட்டியலில், 710 மதிப்பெண்களுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜன் முதலிடம் பெற்றுள்ளார். 705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனபிரபா 2ம் இடம் பிடித்துள்ளார். சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்த ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பெற்றுள்ளார்.
தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது…
இந்தாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின்படி, தேனி சில்வார்பட்டி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.
நவ.18 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தினசரி 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றார்.