வலிமை: வெளிவர இருக்கும் செய்தியால் ரசிகர்கள் உற்சாகம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
valimai ajith - 2026

நாளை அஜித் ரசிகர்களுக்கு சூப்பரான கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியது தொடர்ந்து நாங்க வேற மாதிரி என்ற சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியானது. இதனைத்தொடர்ந்து நேற்று கார்த்திகேயனின் பிறந்த நாள் என்பதால் அவருடைய போஸ்டர் வெளியானது.

மேலும் வலிமை படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது குறித்த கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது நாளை வியாழக்கிழமை அன்று வலிமை படத்தின் டீசர் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.