கோவையில் எடப்பாடி: குமரியில் பன்னீர்; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தவிர்த்து!

Published:

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண உதவி, மீனவர்கள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கையில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே கோவை அவினாசி சாலையில் அண்ணா சிலை அருகே புதிதாக எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா சிலை பராமரிப்பு பணிகள் நடப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இருவரின் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மும்முரமாக இருக்க துணை முதல்வர் பன்னீர் செல்வம் இந்த விழாவை தவிர்த்து விட்டு குமரிக்கு செல்கிறார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் இரட்டையராக இருவரும் கலந்து கொண்டு வந்த நிலையில் இப்போது குமரி மாவட்ட புயல் பாதிப்பைக் காரணம் காட்டி பன்னீர் செல்வம் இந்த விழாவை தவிர்த்துள்ளார்.

இதனால் ஓபிஎஸ் குமரி மாவட்ட புயல் பாதிப்பு குறித்து அறிய அங்கு செல்கிறார் ஓபிஎஸ்..

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img