சமீபத்தில் அர்ஜூன் தாஸ், பூஜா ராமசந்திரன், வினோத் கிஷான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் அந்தகாரம். இப்படம் அமேசன் பிரைமில் கடந்த 24ம் தேதி வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தை பூர்ணா சந்திரா என்பவர் தயாரித்திருந்தார். ஆனாலும், இயக்குனர் அட்லீ இப்படத்தை அவரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்டார்.
இந்நிலையில், இப்படக்குழு சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றது. அப்போது இந்த படக்குழுவினரை கமல்ஹாசன் பாராட்டியதாக தெரிகிறது.

இது தொடர்பான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அட்லீ ‘அந்தகாரம் படக்குழு கமல்ஹாசன் சாரிடம் ஆசி பெற்றது. எப்போதும் எங்களோடு இருந்து எங்களை ஊக்கமளிப்பதற்கு நன்றி சார். உங்கள் வார்த்தைகள் எப்போதும் எங்களை புதிய முயற்சிகளை செய்ய ஊக்கப்படுத்துகிறது. உங்களை நேசிக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.