காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது!

Published:

policeand-camera
policeand-camera

காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் இனி கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது! மதுரையின் அனைத்து முக்கியமான சந்திப்புகளில் அதிநவீன கேமராக்கள் அறிமுகம் – மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம ஆனந்த் சின்ஹா துவக்கிவைத்தார்.

மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும் புதிய முயற்சிகளையும் எடுத்துவருகிறது.

அந்தவகையில் மதுரை நகரின் அனைத்து சிக்னல், முக்கியமான சந்திப்புகள் சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து பொதுமக்கள் வாகன ஒட்டிகளின் பாதுகாப்பு கருதி கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் கண்காணிப்பை தீவிரபடுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மதுரை தெப்பக்குளம் சந்திப்பு உட்பட நகரின் 15 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கேமரா வாகன நம்பர் பதிவேடு உட்பட அனைத்தையும் துல்லியமாக பதிவுசெய்யக்கூடிய வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

இனிமேல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்லும் வாகன ஒட்டிகள் காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் கண்காணிப்பு கேமரா விடம் இருந்து தப்பிக்க முடியாது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

அந்தவகையில் இன்று மதுரை நகரின் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமரா துவக்க விழாமதுரை தெப்பக்குளத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்சட்டம் ஒழுங்கு காவல் துறை உதவி ஆணையாளர் சிவ பிரசாத், உதவி ஆணையாளர்கள் சூரக் குமரன் திருமலைக்குமார்உட்பட காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மாநகர காவல்துறை ஆணையாளர்பிரேம் ஆனந்த் சின்காகூறுகையில்,

மதுரை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகைகளும் விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும் மாநகர காவல்துறை புதிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும்கையாண்டு வருகிறது

இந்த வகையில் மதுரைநகர் நுழைவாயில் உட்படபாலங்கள் சந்திப்புகள் எனமுக்கியமான இடங்களில்அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது

இந்த கண்காணிப்பு கேமரா வானது வாகனங்களின் நம்பர் என்னை சரியாக படம் எடுத்து பதிவிடும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இனிமேல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் விபத்து ஏற்படுத்திவிட்டு எடுக்காமல் சென்றாலோ கண்காணிப்பு கேமராவின் வாகன பதிவு நம்பர் வாகன ஓட்டி மிகத் துல்லியமாக பதிவாகிவிடும்

இதன் மூலம் சந்தேகத்துக்குரிய வாகனங்களை கண்காணிக்க வாகனங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும் முடியும் என்று கூறினார் .

Related articles

Recent articles

spot_img