
லண்டனிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது.
லண்டனில் இருந்து மதுரை வந்த 96 பயணிகளை பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
29 பேருக்கு அறிகுறி இருந்த நிலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தவிட்டுசந்தையை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதித்த பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.