
சோழவந்தானில் சொர்க்கவாசல் திறப்பு: சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
இவ்விழாவை, முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜனக நாராயண பெருமாள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக வந்து கோவிலை வலம் வந்தது ரகுராமன் பட்டர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார் .
ஸ்ரீ கொண்டல் ரவுத் மற்றும் பாண்டுரங்கன் பஜனை குழு ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் பஜனை குழு ஆகிய குழுக்கள் பக்தி பாடல் பாடி வலம் வந்தனர் இதில் ஆலய பணியாளர்கள் பூபதி வசந்த் உட்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்
உபயதாரர் சிவஞானம் பிள்ளை குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர் சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்