
மதுரை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புதூர் மண்டல் வடக்கு ஓபிசி மருத்துவர் அணி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதி மணிவண்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட மருத்துவ அணி செயலாளர் விஜய பீஷ்மர், ஓபிசி அணி பொருளாளர் பாலாஜி தலைமையில் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தமிழ் வளர்ச்சி பிரிவு இஎம்.ஜி.எஸ்., ராதாகிருஷ்ணன். துணைத்தலைவர் ஆதிஸ்வரன், மதுரை சக்தி கேந்திர பொறுப்பாளர் புதூர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.