
மதுரையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுமதிக்கப் பட்டுள்ளனர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை திருப்பத்தில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த லாரி பின்புறம் மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சோலையப்பா என்ற தனியார் பேருந்து பொன்னமராவதி நோக்கி வந்து கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி அதி வேகமாக வந்த லாரி பின்புறம் மோதியதில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் , தகவலறிந்த மேலூர் மற்றும் ஒத்தக்கடை பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கவிழ்ந்த பேருந்திலிருந்து அவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் எட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.