- அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்;
- அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் .அதனை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள்…
- கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது…
- அதிமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் தற்போதும் நீடிக்கின்றன… என்று கூறினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கடந்த மக்களைவைத் தேர்தலில் அமைந்த கூட்டணியே தற்போது நீடித்து வருகிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். அதனை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள் .
உட்கட்சிப் பூசல் என்பது அதிமுக.,வில் மட்டுமல்ல; இந்தியா முழுவதிலும் உள்ள கட்சிகளிலும் உள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணிகளின் நிலை தெளிவாகும். சசிகலா வெளியே வந்தாலும் அரசியலில் மாற்றம் வராது.
ஆளுநரிடம் திமுக அளித்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள் என்பதால் நாட்கள் குறைவாக உள்ளது.
பொதுத் தேர்வு தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்… என்று அவர் கூறினார்.