சென்னை:
ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர் மதுசூதனன், தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை:
ஆர்கே நகரில் ரூ.1.50 கோடிக்கு குக்கர் விற்பனை பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வரி ஏய்ப்பு நடந்ததா என சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
குக்கருக்கான தொகையை தேர்தல் கணக்கு செலவில் சேர்த்து தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குக்கர் கடை உரிமையாளர், தினகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்



