
கடையநல்லுார் அரசு பள்ளி மாணவி மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியா் பாராட்டி பரிசளிப்பு.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான தனி திறன் போட்டி கலாஉத்சவ் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். இந்த போட்டியில் தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு இ பிரிவில் பயின்று வரும் கோபிகாபாரதி பள்ளியின் சார்பில் கலந்து கொண்டு முப்பரிமாண சிலை வடித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.
அவரை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவா் சமீரன் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் துறை சார்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா். பின்னா் பள்ளி தலைமை ஆசிரியா் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் வாழ்த்துகளை தெரிவித்தனா்.