
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மதுரை 16-1-21. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வெல்கின்ற காளைக்கும் வீரருக்கும் கார் – ஓபிஎஸ், இபிஎஸ் வழங்குகின்றனர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைக்கும், சிறந்த மாடு பிடி வீரருக்கும் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தலா ஒரு காரை பரிசளிக்கின்றனர்.
உலகப்புகழ் வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.16) தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். தற்போது வரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விளையாட 655 வீரர்களும், 800 காளைகளும் தயார் நிலையில் உள்ளனர்.
காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணியளவில் நிறைவடைகிறது. அதிக காளைப் பிடிக்கும் சிறந்த வீரருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கும் காரும், களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குகின்ற காரும் பரிசாக வழங்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் செல்லூர் ராஜு விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜு திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் நிர்வாகிகள்
மேலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் பாய்ந்தோடும் காளையின் உரிமையாளருக்கும் தங்கக் காசு, எல்இடி டிவி, பிரிட்ஜ், பைக், மிக்சி, சைக்கிள், கட்டில், மெத்தை போன்ற எண்ணற்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகையையொட்டில் நேற்றிரவு முதலே அலங்காநல்லூர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வீரர்களைப் பரிசோதனை செய்வதற்காகவும், காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை வழங்கவும் 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ்கள் 10 எண்ணிக்கையிலும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மாடுகளுக்கு காயம் ஏறபட்டால் சிகிச்சை மேற்கொள்ள கால்நடை மருத்துவர் குழுவும், 2 கால்நடை ஆம்புலன்ஸ்களும் உள்ளன.
மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசிப்பதற்காக அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பெரிய திரைகள் கொண்ட எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் முகநூல், யூ ட்யூப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் நேரலை செய்யப்படுகின்றன.
முதல் சுற்றுகள் மொத்தம் காளைகள் 84 ஒருவர் காயம் தற்போது இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது